/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கால்நடை வளர்போருக்கு போலீசார் எச்சரிக்கை கால்நடை வளர்போருக்கு போலீசார் எச்சரிக்கை
கால்நடை வளர்போருக்கு போலீசார் எச்சரிக்கை
கால்நடை வளர்போருக்கு போலீசார் எச்சரிக்கை
கால்நடை வளர்போருக்கு போலீசார் எச்சரிக்கை
ADDED : செப் 12, 2025 05:15 AM
சிதம்பரம்: சிதம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் மாடுகளை கட்டுப்படுத்தும் விதமாக அருகில் ரயில்வே போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சிதம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் அடிக்கடி மாடுகள் சுற்றித் திரிவதால், பயணிகள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
இதனை தடுக்கும் வகையில், சிதம்பரம் நகராட்சி துணை சேர்மன் முத்துகுமரன், ரயில்வே போலீஸ் அருண்குமார், ரயில்வே மேலாளர் மணிகண்டன் ஆகியோர், அருகில் உள்ள இந்திரா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு சென்று, 'மாடுகளை மேய்ச்சலுக்கு விடும் போது, ரயில்வே ஸ்டேஷனுக்குள் வராமல் தடுக்க வேண்டும்' என கால்நடை வளர்போரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதனை மீறி மாடுகள் வந்தால் மாடுகளை பிடித்து கோசாலையில் அடைக்கப்படும் என எச்சரித்தனர்.