சிதம்பரத்தில் நுால் வெளியீட்டு விழா
சிதம்பரத்தில் நுால் வெளியீட்டு விழா
சிதம்பரத்தில் நுால் வெளியீட்டு விழா
ADDED : செப் 12, 2025 05:14 AM

சிதம்பரம்: சிதம்பரத்தில் தனலட்சுமி அறக்கட்டளை துவக்க விழா மற்றும் நுால் வெளியீட்டு விழா நடந்தது.
பேராசிரியர் துரை வரவேற்றார். அண்ணாமலை பல்கலைக்கழக இந்திய மொழிப்புலம் புல முதல்வர் பேராசிரியர் அரங்கப்பாரி முன்னிலை வகித்தார்.
பாக்கியலட்சுமி மணி தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். பேராசிரியர்கள் நடராஜன், பேராசிரியர் சந்திர மோகன், இன்ஜினியர் நிலவன் வாழ்த்திப் பேசினர்.
பேராசிரியர் ராமசாமி, பேராசிரியை ஜெயந்தி ஆனந்தன் அறக்கட்ட ளையை துவக்கி வைத்தனர்.
பேராசிரியர் மணிமாறன் எழுதிய, 'கானல் குமிழ்' நுாலை தமிழ்ச் சங்க நிறுவனர் ஆனந்தன், மொழியியல் உயிராய்வு மைய முன்னாள் இயக்கு னர்கள் சீனிவாச வர்மா, நடனசபாபதி ஆகியோர் வெளியிட்டனர்.
இதனை அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் அறிவியல் தமிழ் சங்கம் பேராசிரியர் அண்ணாதுரை, பேராசிரியர் பக்கிரிசாமி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
முன்னதாக தனலட்சுமி அம்மையாரின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.
இன்ஜினியர் நவநீதன் நன்றி கூறினார்.