/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பச்சை வாழியம்மன் கோவிலில் பூர்த்தி விழா பச்சை வாழியம்மன் கோவிலில் பூர்த்தி விழா
பச்சை வாழியம்மன் கோவிலில் பூர்த்தி விழா
பச்சை வாழியம்மன் கோவிலில் பூர்த்தி விழா
பச்சை வாழியம்மன் கோவிலில் பூர்த்தி விழா
ADDED : செப் 12, 2025 05:15 AM

நடுவீரப்பட்டு: எழுமேடு மன்னார் சுவாமி, பச்சை வாழியம்மன் கோவிலில் 10ம் ஆண்டு கும்பாபிஷேக ஆண்டு பூர்த்தி விழா நடந்தது.
பண்ருட்டி அடுத்த எழுமேடு மன்னார் சுவாமி, பச்சை வாழியம்மன் கோவிலில் 10ம் ஆண்டு கும்பாபிஷேக பூர்த்தி விழாவையொட்டி நேற்று காலை சிறப்பு ேஹாம வேள்விகள் நடந்தது.
விநாயகர், பச்சை வாழியம்மன், மன்னார் சுவாமி, முருகர் உள்ளிட்ட அனைத்து மூலவர் சுவாமிகளு க்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
தொடர்ந்து, யாக வேள்வி யில் வைத்து பூஜை செய்யப்பட்ட கலசங்கள் ஆலய உலாவாக வந்து பச்சை வாழியம்மனுக்கு கலச அபிஷேகம் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பூஜையை ஆலய அறங்காவலர் இதயரசு எத்திராஜலு தலைமையிலான விழாக்குழுவினர் செய்திருந்தனர்.