/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ இறந்த குழந்தையுடன் பெண் பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு இறந்த குழந்தையுடன் பெண் பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு
இறந்த குழந்தையுடன் பெண் பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு
இறந்த குழந்தையுடன் பெண் பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு
இறந்த குழந்தையுடன் பெண் பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு
ADDED : ஜூன் 19, 2025 01:03 AM

சிதம்பரம்:சிதம்பரம் அருகே ஆடூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி பச்சையம்மாள், 40. இவர்களுக்கு 3 வயதில் ரோஷிணி உட்பட மூன்று பெண் குழந்தைகள் இருந்தன.
உடல்நிலை சரியில்லாமல் இருந்த பாலமுருகனை பார்க்க, திண்டிவனத்தை சேர்ந்த உறவினர் ஒருவர், சில நாட்களுக்கு முன் வந்தார். அவர் செல்லும்போது, மூன்று குழந்தைகளுடன் பச்சையம்மாளையும் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு மூன்று வயது பெண் குழந்தை ரோஷிணி திடீரென இறந்துவிட்டது எனக்கூறிய அந்த உறவினர், பச்சையம்மாளுடன் குழந்தைகளை பஸ்சில் ஊருக்கு அனுப்பி வைத்தார். கடலுார் பஸ் நிலையத்திற்கு நேற்று அதிகாலை வந்த பச்சையம்மாள், இறந்த குழந்தையை துணியால் போர்த்தி வைத்துக்கொண்டு நடந்து சென்றார்.
இறந்த குழந்தையின் உடலில் ரத்தக் காயங்கள் இருந்ததால், தகவலறிந்த கடலுார் புதுநகர் போலீசார் குழந்தையின் உடலை மீட்டு விசாரணை நடத்துகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.