/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பள்ளி சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது பள்ளி சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது
பள்ளி சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது
பள்ளி சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது
பள்ளி சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது
ADDED : ஜூன் 19, 2025 05:28 AM

சேத்தியாத்தோப்பு: பள்ளி மாணவிக்கு முத்தம் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
சேத்தியாதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது பிளஸ் 1 மாணவி. சிதம்பரம் அடுத்த அம்மாபேட்டை தெற்குவெளி தெருவைச் சேர்ந்தவர் விஜயபாலன்,40;
மாணவி சேத்தியாதோப்பு அடுத்த சி.சாத்தமங்கலத்தில் உள்ள அவரது சித்தி வீட்டிற்கு சென்றிருந்தார்.
அப்போது சி.சாத்தமங்கலம் உள்ள உறவினர் வீட்டிற்கு விஜயபாலன் சென்றார். அப்போது மாணவியை கட்டாயப்படுத்தி மாணவி தங்கியுள்ளள வீட்டின் பின்புறம் உள்ள வாழைத்தோட்டத்திற்கு அழைத்து சென்று அவரை பலாத்காரம் செய்ய முயன்யுள்ளார் அப்போது மணவியின் அலரல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள ஓடிவந்தனர். உடன் விஜயபாலன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இது குறித்து மாணவியின் தாய் கொடுத்த புகாரின்பேரில் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீசார் விஜயபாலான் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.