/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஸ்ரீ பரணி வித்யாலயா பள்ளி அரசு பொதுத்தேர்வுகளில் அபாரம் ஸ்ரீ பரணி வித்யாலயா பள்ளி அரசு பொதுத்தேர்வுகளில் அபாரம்
ஸ்ரீ பரணி வித்யாலயா பள்ளி அரசு பொதுத்தேர்வுகளில் அபாரம்
ஸ்ரீ பரணி வித்யாலயா பள்ளி அரசு பொதுத்தேர்வுகளில் அபாரம்
ஸ்ரீ பரணி வித்யாலயா பள்ளி அரசு பொதுத்தேர்வுகளில் அபாரம்
ADDED : மே 21, 2025 11:27 PM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த பெரியப்பட்டு ஸ்ரீ பரணி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி அரசு பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனைப்படைத்துள்ளது.
பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில், பள்ளிளவில் மாணவி ஹரீப்பிரீத்தா, 587 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், ஹேமலதா, 585 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், காவியா, 582 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். 22 மாணவர்கள், 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியளவில், மாணவி பிரியங்கா 497 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், மாநில அளவில் மூன்றாம் இடத்தையும், மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளார். ராஜதாயன்பா, கதீஜா சுகைனா ஆகியோர் 489 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், பமிதா மரியம், சாதனா ஆகியோர் 488 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
சாதனைப்படைத்த மாணவர்களை, பள்ளியின் தாளாளர் தமிழரசி பரணி, தலைமை ஆசிரியர் லோகபரணி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.