/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சாலையின் குறுக்கே மாடு ஓடியதில் பைக்கிலிருந்து கீழே விழுந்தவர் பலி சாலையின் குறுக்கே மாடு ஓடியதில் பைக்கிலிருந்து கீழே விழுந்தவர் பலி
சாலையின் குறுக்கே மாடு ஓடியதில் பைக்கிலிருந்து கீழே விழுந்தவர் பலி
சாலையின் குறுக்கே மாடு ஓடியதில் பைக்கிலிருந்து கீழே விழுந்தவர் பலி
சாலையின் குறுக்கே மாடு ஓடியதில் பைக்கிலிருந்து கீழே விழுந்தவர் பலி
ADDED : மே 21, 2025 11:29 PM

புவனகிரி: சாலையின் குறுக்கே மாடுகள் ஓடியதால் பைக்கிலிருந்து கீழே விழுந்தவர் இறந்தார்.
புவனகிரி அடுத்த சாத்தப்பாடி கிழக்குத்தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்,42; விவசாய தொழிலாளி. நேற்று முன் தினம் அவருக்கு சொந்தமான பைக்கில், அதேப்பகுதியைச் சேர்ந்த உறவினர் ரங்கநாதன்,40; என்பவருடன் குண்டியமல்லுாரில் உள்ள உறவினர் வீட்டில், தன் தாயாரின் காரியத்திற்கான பத்திரிகை வைத்து விட்டு வீட்டிற்கு திரும்பினர்.
இரவு 8.30 மணிக்கு சாத்தப்பாடியில் உள்ள தனியார் பங்க்கடை அருகில் வந்தபோது சாலையின் குறுக்கே மாடு கள் சென்றதால் நிலைதடுமாறி பைக்கில் சென்ற இருவரும் கீழே விழுந்தனர். இதில் படுகாயடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ராஜேந்திரனை மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் அதிகாலை அவர் இறந்தார்.
புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.