ADDED : மே 21, 2025 11:26 PM

கடலுார்: கடலுாரில், முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு நாளையொட்டி, அவரது உருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
கடலுார் மாநகர காங்.,சார்பில் முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு நாளையொட்டி, மஞ்சக்குப்பத்தில் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாநகர காங்.,தலைவர் வேலுசாமி தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார், கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொதுச்செயலாளர்கள் காமராஜ், கிஷோர், ராஜேஷ் முன்னிலை வகித்தனர்.
காங்.,நிர்வாகிகள் ஆறுமுகம், கடல் கார்த்தி, ராமராஜ், அன்பழகன், ராஜ்குமார், தரணிதரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.