/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சமூக நலத்துறை பணியாளர் சங்க மாவட்ட மாநாடு சமூக நலத்துறை பணியாளர் சங்க மாவட்ட மாநாடு
சமூக நலத்துறை பணியாளர் சங்க மாவட்ட மாநாடு
சமூக நலத்துறை பணியாளர் சங்க மாவட்ட மாநாடு
சமூக நலத்துறை பணியாளர் சங்க மாவட்ட மாநாடு
ADDED : செப் 20, 2025 11:39 PM

கடலுார் : தமிழ்நாடு சமூக நலத்துறை பணியாளர் சங்க மாவட்ட மாநாடு, கடலுார் அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் நடந்தது.
பண்ருட்டி குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். கடலுார் கிழக்கு, குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் குமரவேல் வரவேற்றார். சமூக நலத்துறை பணியாளர் சங்க மாநில தலைவர் ரவி பேசினார்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க கடலுார் மாவட்ட தலைவர் வெங்கடாஜலபதி, ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் காசிநாதன், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரிகிருஷ்ணன், சமூக நலத்துறை பணியாளர் சங்க மாநில துணைத் தலைவர்கள் மலர்விழி, பன்னீர்செல்வம், மாநில செயலாளர்கள் இதயகுமார், காந்திமதி வாழ்த்திப் பேசினார்.
மாநில அமைப்பு செயலாளர் சக்தி வினோத்குமார் நிறைவுரையாற்றினார். அனைத்து நிலை பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதலில் கலந்தாய்வு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். அனைத்து வட்டாரங்களிலும் அலுவலர் முதல் உதவியாளர் வரை காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
மாநில செயலாளர் குருமூர்த்தி நன்றி கூறினார்.