/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அஞ்சல் ஊழியர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் அஞ்சல் ஊழியர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்
அஞ்சல் ஊழியர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்
அஞ்சல் ஊழியர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்
அஞ்சல் ஊழியர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : செப் 20, 2025 11:46 PM

விருத்தாசலம் : விருத்தாசலம் அஞ்சல் கோட்டம் சார்பில் துாய்மையே சேவை கருத்தை வலியுறுத்தி, அஞ்சல் ஊழியர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
விருத்தாசலம் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் துவங்கிய நிகழ்ச்சியை, கோட்ட கண்காணிப்பாளர் ஜெயசீலன் கொடியசைத்து துவக்கி வைத்தார். துணை கண்காணிப்பாளர் மீனாட்சிசுந்தரம், ஆய்வாளர் தமிழரசன் முன்னிலை வகித்தனர்.
துாய்மையே சேவை, சுத்தமான சுற்றுச்சூழல், சுகாதாரமான குடிநீர் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை ஆகியவற்றை வலியுறுத்தி நுாற்றுக்கும் மேற்பட்ட அஞ்சல் ஊழியர்கள் ஊர்வலமாக வந்தனர். விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் பொதுமக்களிடம் வழங்கப்பட்டது.
பாலக்கரை, ஜங்ஷன் ரோடு வழியாக ஜங்ஷன் சாலையில் உள்ள தலைமை அஞ்சலகம் வரை ஊர்வலம் நடந்தது.
தலைமை அஞ்சலக அலுவலர் ஞானசேகரன் நன்றி கூறினார்.