ADDED : செப் 20, 2025 11:38 PM

கடலுார் : கடலுார் செயின்ட் ஜோசப் கல்லுாரியில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் 'ஒன்றிணைவோம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், எஸ்.பி., ஜெயக்குமார் ஆகியோர் பேசினர். பின், 'சமூக நீதியை நிலைநாட்டுவதில் மாணவர்களின் பங்கு' என்ற தலைப்பில் நடந்த நாடக போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினர்.
நிகழ்ச்சியில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி., மனிஷா, சுவாமிநாதன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் லதா, புள்ளியியல் ஆய்வாளர் ரவிசங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.