/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நேரடி கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம் நேரடி கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்
நேரடி கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்
நேரடி கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்
நேரடி கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்
ADDED : செப் 20, 2025 07:24 AM
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு பகுதியில் பெய்த கனமழையால் நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் நனைந்து சேதமானது.
சேத்தியாத்தோப்பு மற்றும் சுற்றியுள்ள வீரமுடையாநத்தம், எறும்பூர், அகரஆலம்பாடி, வளையமாதேவி, மிராளூர், பின்னலுார், ஓடாக்கநல்லுார், மதுராந்தகநல்லுார், ஒரத்துார், வாக்கூர், வாழைக்கொல்லை, வடப்பாக்கம், வெள்ளியக்குடி, சாத்தமங்கலம், பரதுார் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகிறது.
இங்கு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள், சரியான முறையில் குடோன்களுக்கு கொண்டு செல்வதில் கால தாமதம் ஏற்படுகிறது.
இதனால் ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையங்களிலும் 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளது. விவசாயிகள் அறுவடை செய்த நெல் குவியலாக உள்ளன.
இந்நிலையில், இப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை முதல், இரவு வரை பெய்த மழை காரணமாக நெல் மூட்டைகள் நனைந்து சேதமானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இப்பிரச்னைக்கு தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.