ADDED : அக் 03, 2025 01:45 AM
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில், அரிமா சங்கம் சார்பில் காந்தி பிறந்த நாள் விழா நடந்தது.
அரிமா சங்க தலைவர் அருள்வாசகம் தலைமை தாங்கி, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். முன்னாள் அரிமா சங்க தலைவர்கள் அருள்முருகன், புருஷோத்தமன், மனோகரன், ஹவுஸ் கமீது முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியன், செயலாளர் நடராஜன், பொருளாளர் மகேந்திரன், தி.மு.க., நகர முன்னாள் செயலாளர் பாண்டியன், வர்த்தக சங்க துணை தலைவர் அய்யப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.


