/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விவசாயிகளுக்கு பயிர் திட்டங்கள் பிரசாரம் விவசாயிகளுக்கு பயிர் திட்டங்கள் பிரசாரம்
விவசாயிகளுக்கு பயிர் திட்டங்கள் பிரசாரம்
விவசாயிகளுக்கு பயிர் திட்டங்கள் பிரசாரம்
விவசாயிகளுக்கு பயிர் திட்டங்கள் பிரசாரம்
ADDED : ஜூன் 01, 2025 11:54 PM

விருத்தாசலம்: நல்லுார் வட்டாரம், பூலாம்பாடி கிராமத்தில், காரீப் பருவத்திற்கான தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு சிறப்பு பிரசார இயக்கம் நடந்தது.
விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தலைமை தாங்கினார். தொழில்நுட்ப வல்லுனர்கள் சுகுமாறன், ஜெயக்குமார், பாரதிகுமார், காயத்ரி ஆகியோர் தேசிய மற்றும் மாநில அளவிலான விவசாயிகளுக்கான திட்டங்கள், காரீப் பயிர் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.
மேலும், விவசாயிகளுக்கான பயிர் திட்டங்கள், தொழில்நுட்பங்கள் குறித்து கருத்துக்காட்சிகள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது. மத்திய உவர் நீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தின் பேராசிரியர்கள் ஜோசப் சகாயராஜன், ெஷர்லி டாமி, எழில் பிரவினா ஆகியோர் மீன் வளர்ப்பு, அதன் தொழில்நுட்பங்கள் குறித்து பேசினர்.
இப்கோ மற்றும் தனுக்கா நிறுவனங்கள் சார்பில் பூச்சிமருந்து தெளிக்க டுரோன் செயல்விளக்கப் பயிற்சி அளித்தனர்.