/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவு விழா கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவு விழா
கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவு விழா
கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவு விழா
கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவு விழா
ADDED : ஜூன் 01, 2025 11:54 PM

சிதம்பரம்: சிதம்பரம் ஆறுமுக நாவலர் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கோடைக்கால சிறப்பு விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது.
ஆறுமுக நாவலர் சைவ பிரகாச வித்யாசாலா அறக்கட்டளை குழு செயலாளர் அருள்மொழிச் செல்வன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ராம்குமார் வரவேற்றார். ஓய்வு பெற்ற ஆசிரியர் சபாநாயகம் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினர் அண்ணாமலைப் பல்கலைக்கழக யோகா பயிற்சி மைய இயக்குனர் கார்த்திகேயன் உடற்பயிற்சியின் அவசியம் குறித்து பேசினார். முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
பயிற்சி அளித்த அண்ணாமலைப் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. விழாவில், பள்ளிக் குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், முருகையன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
உடற்கல்வி ஆசிரியர் எத்திராஜ் நன்றி கூறினார்.