/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நிதி ஒதுக்கீடு செய்தும் சாலை பணி மந்தம் நிதி ஒதுக்கீடு செய்தும் சாலை பணி மந்தம்
நிதி ஒதுக்கீடு செய்தும் சாலை பணி மந்தம்
நிதி ஒதுக்கீடு செய்தும் சாலை பணி மந்தம்
நிதி ஒதுக்கீடு செய்தும் சாலை பணி மந்தம்
ADDED : ஜூன் 01, 2025 11:53 PM

நடுவீரப்பட்டு: வானமாதேவி-பெத்தாங்குப்பம் இடையே சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தும் பணி துவங்காததால் கிராம மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
நடுவீரப்பட்டு அடுத்த வானமாதேவி உயர்மட்ட பாலத்தில் இருந்து பெத்தாங்குப்பம் வரை ஆங்காங்கே ஜல்லிகள் பெயர்ந்து சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. சாலையை சீரைமக்க பல முறை அதிகாரிகளிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்பேரில், கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலையை சீரமைக்க கடந்த பிப்., மாதம் கடலுார் வந்த முதல்வர் ஸ்டாலின் நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டார். நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட மட்டுமே கல்வெட்டுமே சாலையோரத்தில் உள்ளது. ஆனால், 3 மாதங்களாகியும் சாலை அமைக்கும் பணி துவங்கவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இனியாவது சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.