ADDED : செப் 22, 2025 11:24 PM
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் பகுதியில் வேர்க்கடலை அறுவடை செய்யும் பணி துவங்கியுள்ளது.
புதுச்சத்திரம் அடுத்த வேளங்கிப்பட்டு, பால்வாத்துண்ணான், சேந்திரக்கிள்ளை உள்ளிட்ட பகுதிகளில் புஞ்சை நிலத்தில் ஆண்டுதோறும் வைகாசி பட்டத்தில் விவசாயிகள் வேர்க்கடலை பயிரிடுவது வழக்கம். இந்தாண்டு கடந்த வைகாசி மாதம், இப்பகுதி விவசாயிகள் வேர்க்கடலை சாகுபடி செய்தனர்.
தொடர்ந்து அவ்வப்போது பெய்த மழையால், வேர்க்கடலை செடிகள் நன்கு வளர்ந்துள்ளன.
தற்போது வேர்க்கடலை அறுவடை செய்யும் பணி யில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.