ADDED : செப் 22, 2025 11:25 PM
சிறுபாக்கம் : மங்களூர் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
பி.டி.ஓ., சண்முக சிகாமணி தலைமை தாங்கினார். பி.டி.ஓ., முருகன் முன்னிலை வகித்தார். நிர்வாக மேலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். கூட்டத்தில் துணை பி.டி.ஓ.,க்கள், இன்ஜினியர்கள், திட்ட மேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், ஊராட்சிகள் தோறும் துாய்மை பணிகள், சுகாதார பராமரிப்பு, அடிப்படை வசதிகள் பராமரிப்பு, கான்கிரீட் வீடு கட்டுமான பணிகள், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை, நிலுவை பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.