/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள்... தேக்கம்; அரசின் புதிய விலையை எதிர்பார்த்து காத்திருப்பு கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள்... தேக்கம்; அரசின் புதிய விலையை எதிர்பார்த்து காத்திருப்பு
கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள்... தேக்கம்; அரசின் புதிய விலையை எதிர்பார்த்து காத்திருப்பு
கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள்... தேக்கம்; அரசின் புதிய விலையை எதிர்பார்த்து காத்திருப்பு
கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள்... தேக்கம்; அரசின் புதிய விலையை எதிர்பார்த்து காத்திருப்பு
ADDED : செப் 01, 2025 12:18 AM

சேத்தியாத்தோப்பு : தமிழக அரசின் புதிய விலையை எதிர்பார்த்து விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்யாததால் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் ஆயிரக் கணக்கான மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. தமிழக அரசு மோட்டா ரகம் குவிண்டாலுக்கு 2,500 ரூபாய், சன்னரகம் 2,545 ரூபாய் என அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு இன்று 1ம் தேதி முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைமுறைபடுத்த உள்ளது.
இந்த புதிய விலை அறிவிப்பால் நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் 40 கிலோ எடையுள்ள மோட்டா ரகம் மற்றும் சன்ன ரகத்திற்கும் 38 ரூபாய் கூடுதலாக கிடைப்பதை எண்ணி விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் விற்பனை செய்யாமல் உள்ளனர். இதனால் கொள்முதல் நிலைய வளாகத்தில் உள்ள களங்களில் நெல் குவியில்கள் மற்றும் பல ஆயிரக்கணக்கான மூட்டைகள் தேக்கமடைந்துள்ளது.
புவனகிரி, கீரப்பாளையம், சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில், கம்மாபுரம் உள்ளிட்ட தாலுகாக்களில் கடந்த 15 நாட்களுக்கு முன் குறுவை நெல் அறுவடை துவங்கி தீவிரமாக நடந்து வருகிறது.
அவ்வப்போது விவசாயிகளை மிரட்டும் விதமாக விட்டு விட்டு பெய்து வரும் மழையினால் அறுவடை பணிகள் மிகவும் பாதிக்கப்பட்டது. கடந்த 4 நாட்களாக தீவிரமாக நெல் அறுவடை பணியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கிராமப் புறங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் போதிய இடமில்லாததால் மண் தரையில் கொட்டி தார்பாய் போட்டு மூடி வைத்துள்ளனர். வியாபாரிகள் 65 கிலோ எடை மூட்டை 1260 ரூபாய்க்கும், 75 கிலோ எடையுள்ள பெரிய மூட்டை 1,400 ரூபாய்க்கும் நெல்கொள்முதல் செய்கின்றனர்.
குறைவான விலைக்கு விற்பனை செய்ய மனமில்லாத விவசயிகள் புதிய விலையை எதிர்ப்பார்த்து புதிய விலையை எதிர்ப்பார்த்து அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் நிலையங்களில் கொட்டி குவித்து வருகின்றனர். இதனால் ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களில் 1000 மூட்டைகள் முதல் 3000 ஆயிரம் மூட்டைகள் வரை தேக்கமடைந்துள்ளது.