/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தேவனாம்பட்டினம் கடலில் 2ம் நாளாக விநாயகர் சிலைகள் விஜர்சனம் தேவனாம்பட்டினம் கடலில் 2ம் நாளாக விநாயகர் சிலைகள் விஜர்சனம்
தேவனாம்பட்டினம் கடலில் 2ம் நாளாக விநாயகர் சிலைகள் விஜர்சனம்
தேவனாம்பட்டினம் கடலில் 2ம் நாளாக விநாயகர் சிலைகள் விஜர்சனம்
தேவனாம்பட்டினம் கடலில் 2ம் நாளாக விநாயகர் சிலைகள் விஜர்சனம்
ADDED : செப் 01, 2025 12:16 AM

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று தேவனாம்பட்டினம் கடலில் 2ம் நாளாக சிலைகள் விஜர்சனம் செய்யப் பட்டது.
கடலுார் மாவட்டத்தில் 1,373 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இந்த சிலைகளுக்கு பூஜை செய்து பக்தர்கள் வழிபட்டனர். மூன்றாவது நாளான 29ம் தேதி சிலைகள் அருகில் உள்ள நீர் நிலைகளில் விஜர்சனம் செய்யப்பட்டது.
நேற்று ஏற்கனவே ஒதுக்கப்பட்ட புதுப்பேட்டை, சின்னுார், சாமியார்பேட்டை, பெரியகுப்பம், நெய்வேலி, தாண்டவன்குப்பம் ஏரி, பெருமாள் கோவில் குளம், சேத்தியாதோப்பு குமார ஒடைப்பு வாய்க்கால், காட்டுமன்னார்கோவில், வடவாறு, வீரநல்லுார், சிறுபாக்கம், மா.குடிகாடு ஏரி உள்ளிட்ட 12 இடங்களில் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டன.
கடலுார், தேவனாம்பட்டினம் கடலில் நேற்று காலை முதல் பல்வேறு பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் வாகனத்தில் ஏற்றி வந்து கடலில் விஜர்சனம் செய்தனர். எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மந்தாரக்குப்பம் மந்தாரக்குப்பம் வெற்றி விநாயகர் கோவிலில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு தினசரி பூஜை நடந்தது. நேற்று இ ரவு 7:00 மணியளவில் 1,008 கொழுக்கட்டை வைத்து சிறப்பு பூஜை நடத்தி சிலை வீதியுலா நடந்தது. பின், வடக்கு வெள்ளுர் காசி விஸ்வநாதர் கோவில் திருக்குளத்தில் விநாயகர் சிலை விஜர்சனம் செய்யப்பட் டது.