Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நுகர்வோர் நலச்சங்க முப்பெரும் விழா

நுகர்வோர் நலச்சங்க முப்பெரும் விழா

நுகர்வோர் நலச்சங்க முப்பெரும் விழா

நுகர்வோர் நலச்சங்க முப்பெரும் விழா

ADDED : செப் 01, 2025 12:22 AM


Google News
Latest Tamil News
கடலுார் : கடலுார் மாநகராட்சி வரி செலுத்துபவர்கள் மற்றும் நுகர்வோர்கள் நல சங்கத்தினர் சார்பில் நான்காம் ஆண்டு துவக்க விழா, பொதுக்குழு மற்றும் சாதனையாளர்களை கவுரவித்தல் என முப்பெரும் விழா கடலுாரில் நடந்தது.

விழாவிற்கு சங்கத் தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இணை செயலாளர் முகுந்தன் வரவேற்றார். செயலாளர் பாலசுந்தரம், ஆண்ட றிக்கை வாசித்தார். பொருளாளர் தண்டபாணி, நிதி நிலை அறிக்கை வாசித்தார்.

தணிக்கையாளர் ராஜதுரை, துணைத் தலைவர்கள் தங்கதுரை, கோபிநாத், பிரபுகுமார், பச்சையப்பன், ராஜமச்சேந்திர சோழன் முன்னிலை வகித்தனர். டி.ஆர்.ஓ., ராஜசேகரன், அரிமா சங்க நிர்வாகி உமாசங்கர் குத்துவிளக்கேற்றி சாதனையாளர்களை கவுரவித்தனர்.

முதல்நிலை ஆளுநர் சாலை கனகதாரன், மரக்கன்றுகள் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கினார்.

வழக்கறிஞர் அருணாசலம், வாழ்வியல் நெறிமுறைகள் விழிப்புணர்வு பரப்புரையாளர் சிவப்பிரகாசத்திற்கும், வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், இளம் விஞ்ஞானி விருதுபெற்ற பிரபாகரனுக்கும் சாதனையாளர் விருது வழங்கினர்.

சட்ட ஆலோசகர் தமிழரசன், தேர்வில் வெற்றி பெற்றவர்களை அறிமுகம் செய்தார். சட்ட ஆலோசகர்கள் சந்திரசேகரன், கருணாகரன் ஆகியோர் ரத்த தானம் வழங்கியவர்களை கவுரவித்தனர்.

வழக்கறிஞர் திருவேங்கடராமன், கவுரவ ஆலோசகர் கார்மேக வண்ணன் ஆகியோர் கண்தானம் வழங்கி உறுதியளித்தவர்களை கவுரவித்தனர். விழாவில் துணை செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us