Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரூ.3 லட்சம் செலவழித்ததுதான் மிச்சம்; பணி ஆணை வழங்காமல் அலைக்கழிப்பு; பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டிய தி.மு.க., நிர்வாகி புலம்பல்

ரூ.3 லட்சம் செலவழித்ததுதான் மிச்சம்; பணி ஆணை வழங்காமல் அலைக்கழிப்பு; பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டிய தி.மு.க., நிர்வாகி புலம்பல்

ரூ.3 லட்சம் செலவழித்ததுதான் மிச்சம்; பணி ஆணை வழங்காமல் அலைக்கழிப்பு; பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டிய தி.மு.க., நிர்வாகி புலம்பல்

ரூ.3 லட்சம் செலவழித்ததுதான் மிச்சம்; பணி ஆணை வழங்காமல் அலைக்கழிப்பு; பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டிய தி.மு.க., நிர்வாகி புலம்பல்

ADDED : செப் 16, 2025 11:59 PM


Google News
Latest Tamil News
விருத்தாசலம் நாச்சியார்பேட்டையை சேர்ந்தவர் சவுந்தரராஜன். தி.மு.க., உறுப்பினர். கடந்த 2023ல் நடந்த மக்களுடன் முதல்வர் முகாமில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் வீடு கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

அப்போது, பிரதம மந்திரி வீடுகள் திட்டத்திற்கான திட்ட பொறுப்பாளர்கள், கீழ்த்தளம் அமைத்ததும், வீடு கட்ட மானிய தொகை கிடைக்கும் என கூறியதை நம்பி, 3 லட்சம் ரூபாய் செலவில் கீழ்த்தளம் போட்டுள்ளார். ஆனால், இதுவரை வீட்டிற்கான பணியாணை வழங்கப்படவில்லை.

இந்நிலையில், சமீபத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுத்தபோது, அதிகாரிகள் விசாரணை செய்தும், பணி ஆணை வழங்காத நிலையில், கீழ்த்தளம் ஏன் போட்டீர்கள் என கேட்டுள்ளனர். மேலும், புதிதாக மனு கொடுக்குமாறு தெரிவரித்துள்ளனர்.

பிரதம மந்திரி வீடு திட்ட பொறுப்பாளர்களின் அலட்சியத்தால், 3 லட்சம் செலவழித்து வீணாகி விட்டதே என சவுந்தரராஜன் புலம்பி வருகிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், 'வி ருத்தாசலம் நகராட்சி 4வது வார்டில், இளைஞரணி வட்ட துணை அமைப்பாளராக இருந்தேன். தற்போது அடிப்படை உறுப்பினராக உள்ளேன். 2023ல் ஒப்பந்த அடிப்படையில் வீடு கட்ட பயனாளிகள் தேர்வு செய்யும் நபரின் பேச்சை கேட்டு, 3 லட்சம் செலவில் கீழ்த்தளம் அமைத்தேன். ஆனால், இதுநாள் வரை பணியாணை வழங்கப்படவில்லை. எனக்கு பதிலாக மாற்று நபருக்கு பணியாணை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது, உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மீண்டும் புதிதாக மனு கொடுத்துள்ளேன். பொறுப்பாளர்கள் முறையாக பணி செய்யாததால் 3 லட்சத்தில் அடித்தளம் போட்டு ஏமாந்து விட்டேன்' என்றார்.

இதுபோல் விருத்தாசலம் நகரில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு விண்ணப்பித்து, திட்ட பொறுப்பாளர்கள் அலட்சியத்தால் பலர் அலைக்கழிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us