/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ போலீஸ் விரட்டினாலும் தொடரும் சேவல் சண்டை போலீஸ் விரட்டினாலும் தொடரும் சேவல் சண்டை
போலீஸ் விரட்டினாலும் தொடரும் சேவல் சண்டை
போலீஸ் விரட்டினாலும் தொடரும் சேவல் சண்டை
போலீஸ் விரட்டினாலும் தொடரும் சேவல் சண்டை
ADDED : செப் 17, 2025 12:00 AM
சிதம்பரம் அடுத்த சின்னாண்டிக் குழியில், விடுமுறை நாட்களில் சேவல் சண்டை ஜரூராக நடந்து வருகிறது.
சிதம்பரம் அடுத்த சின்னாண்டிகுழியில், உள்ள முந்திரி தோப்பில் ஒவ்வொரு வாரமும், ஞாயிற்றுக்கிழமையும், விடுமுறை நாட்களில் சுற்றுப்பகுதிகளைச சேர்ந்த ஏராளமான இளைஞர்கள், தாங்கள் வளர்க்கும் சண்டை சேவல்களை கொண்டு வந்து, தலா 500 ரூபாய் வீதம் பந்தயம் வைத்து சண்டை விடுகின்றனர்.
ஒவ்வொரு வாரமும் 20க்கும் மேற்பட்ட சேவல்கள் கொண்டு வரப்படுகிறது.
ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 10:00 மணிக்கு துவங்கும் சேவல் சண்டை மாலை வரை நடக்கிறது.
தகவல் அறியும் போலீசார் அவ்வப்போது சேவல் சண்டை நடக்கும் இடத்திற்கு சென்று, இளைஞர்களை விரட்டி அடித்தும், பலரை கைது செய்தும் அபராதம் விதித்தும், சேவல் சண்டை விடுவது குறைந்தபாடில்லை.