Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பதவி உயர்ந்தும் பலனில்லை; சிறப்பு எஸ்.ஐ.,கள் புலம்பல்

பதவி உயர்ந்தும் பலனில்லை; சிறப்பு எஸ்.ஐ.,கள் புலம்பல்

பதவி உயர்ந்தும் பலனில்லை; சிறப்பு எஸ்.ஐ.,கள் புலம்பல்

பதவி உயர்ந்தும் பலனில்லை; சிறப்பு எஸ்.ஐ.,கள் புலம்பல்

ADDED : செப் 16, 2025 11:59 PM


Google News
தமிழக காவல்துறையில் கடந்த 1993, 94 மற்றும் 97ம் ஆண்டுகளில் இரண்டாம் நிலை காவலராக தேர்வாகி, பணி புரிந்து வருவோர், முறையாக முதல்நிலை காவலர், தலைமை காவலர் (ஏட்டு) என 25 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்களாக (எஸ்.எஸ்.ஐ.,) பதவி உயர்வு பெறுகின்றனர்.

இவர்களுக்கு உதவி சப் இன்ஸ்பெக்டர் பதவி தரப்பட வேண்டும். ஆனால், 30 ஆண்டுகள் பணிபுரிந்தும், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அந்தஸ்திலேயே பணிபுரிந்து ஓய்வு பெறும் அவலம் தொடர்கிறது.

இதுபோல், 1993, 94 மற்றும் 97ம் ஆண்டுகளில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றவர்கள், சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் சப் இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

ஆனால், கடலுார் உட்பட பிற மாவட்டங்களில் பணிபுரிவோருக்கு பணியிடம் காலியாக இல்லை எனக்கூறி, 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அந்தஸ்திலேயே பணிபுரியும் அவலம் தொடர்கிறது. இதனால் கூடுதல் மரியாதை, பணப்பலன் என எந்தவித பயனும் இல்லாமல் ஓய்வு பெறும் நிலையில் இருப்பதாக சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் புலம்புகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us