ADDED : ஜூன் 11, 2025 08:59 PM
கடலுார்; கடலுாரில் மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி காணாமல் போனது குறித்து புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
கடலுார் கோண்டூரைச் சேர்ந்தவர் ரங்கநாதன் மனைவி சந்திரா,60. மனநலம் பாதிக்கப்பட்டவர். கோண்டூரில் மகன் லட்சுமிதாசுடன் வசித்துவந்தார். கடந்த 9ம் தேதி வீட்டில் இருந்த சந்திரா காணாமல் போனார். எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. புகாரின் பேரில் கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.