/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ எட்டாக்கனியாக உள்ள வில்வித்தை போட்டி எட்டாக்கனியாக உள்ள வில்வித்தை போட்டி
எட்டாக்கனியாக உள்ள வில்வித்தை போட்டி
எட்டாக்கனியாக உள்ள வில்வித்தை போட்டி
எட்டாக்கனியாக உள்ள வில்வித்தை போட்டி
ADDED : ஜூன் 11, 2025 09:00 PM
கடலுார்; அரசுப்பள்ளி மாணவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ள வில்வித்தை பயிற்சி வழங்க, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள், மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆசிய வில்வித்தை, உலக வில்வித்தை, காமன்வெல்த் போட்டிகள் மற்றும் பாராலிம்பிக் வில்வித்தைப் போட்டிகளில் இந்திய அணி சார்பில் வீரர்கள் கடந்த சில ஆண்டுகளில் வெற்றிபெற்று பதக்கங்களை பெற்று வருகின்றனர். இதன் எதிரொலியாக இந்தியா மற்றும் தமிழகத்தில் வில்வித்தையில் பயிற்சி பெறுவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வில்வித்தை விளையாட்டு சேர்க்கப்படவில்லை. இதனால் மாவட்ட அளவில் இப்போட்டி நடத்தப்படாமல் நேரடியாக தேசிய போட்டியில் பங்கேற்பதற்கான தமிழக அணியில் வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்த விளையாட்டில் பயிற்சி பெற ஆண்டுக்கு 3லட்ச ரூபாய் முதல் 5லட்ச ரூபாய் வரை செலவு செய்ய வேண்டும் என்பதால், வசதி உள்ள பெற்றோர்கள் மட்டுமே தங்கள் பிள்ளைகளுக்கு பயிற்சி கொடுக்க முன்வருகின்றனர். இதனால் ஏழ்மை நிலையில் உள்ள மற்றும் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இப்போட்டியில் பயிற்சி எடுக்க முடியாத நிலை உள்ளது.
எனவே, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் மாவட்ட விளையாட்டு மைதானங்களில் வில்வித்தை பயிற்சியாளர்களை நியமித்து அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.