ADDED : ஜூன் 11, 2025 08:59 PM
சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அடுத்த சக்திவிளாகம் கிராமத்தில் சக்திகாளியம்மன், மன்மதன் கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.
நேற்று முன்தினம் மாலை விநாயகர் பூஜை, வாஸ்துசாந்தி, மிருத்சங்கிரஹணம், அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், கலசஸ்தாபனம் முதல்கால யாக வேள்வி, இரவு 9.00 மணிக்கு உபசார வழிபாடு நடந்தது. நேற்று அதிகாலை 4.00 மணிக்கு கோபூஜை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. காலை 6.00 மணிக்கு இரண்டாம் கால மஹா பூர்ணாகுதி தீபாராதனை யந்திரதானம் நடந்தது.
காலை 6.30 மணிக்கு கடம்புறப்பாடாகி மன்மதன் கோவில் கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு அதனை தொடர்ந்து சக்திகாளியம்மன் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்ட கும்பாபிேஷகம் நடந்தது.