/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தி.மு.க., ஆட்சியில் விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை : அன்புமணி தி.மு.க., ஆட்சியில் விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை : அன்புமணி
தி.மு.க., ஆட்சியில் விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை : அன்புமணி
தி.மு.க., ஆட்சியில் விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை : அன்புமணி
தி.மு.க., ஆட்சியில் விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை : அன்புமணி
ADDED : செப் 11, 2025 03:17 AM

பண்ருட்டி:'உரிமை மீட்பு, தலைமுறை காக்க' நடைப்பயணம் மேற்கொண்டுள்ள பா.ம.க., தலைவர் அன்புமணி, நேற்று கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பலாப்பட்டு கிராமத்தில் பலா, முந்திரி விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
அன்புமணியை பா.ம.க., வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். பொதுச் செயலாளர் வடிவேல்ராவணன், சொத்து பாதுகாப்பு குழு தலைவர் கோவிந்தசாமி, தலைமை நிலைய செயலாளர் செல்வகுமார், கிழக்கு மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன், அமைப்பு செயலாளர் தர்மலிங்கம், மாவட்ட தலைவர் டாக்டர் கவுரிசங்கர், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது :
விவசாயத்திற்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்கவில்லை. தமிழகத்தில் 2 லட்சத்து 10 ஏக்கர் பரப்பளவில் முந்திரி பயிரிடப்பட்டுள்ளது. இதில் கடலுார் மாவட்டத்தில் மட்டும் 71 ஹெக்டர் பயிரிடப்பட்டுள்ளது. தானே புயலின்போது முந்திரி மரங்கள் வேரோடு சாய்ந்தன. அப்போது விவசாயிகளுக்கு புதிய ஒட்டுரக கன்றுகள் வழங்குகிறோம். மரம் ஆகும் வரை பாதுகாக்கிறோம் என கூறினர்.
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நிறைய வாக்குறுதிகள் கொடுத்தார். முந்திரி மண்டலம், வாரியம் அமைப்போம் என்றார். ஆனால் அதன்பின் ஏதும் செய்யவில்லை.
கேரளாவில் பலாப்பழம் மதிப்பு கூட்டப்பட்டு 200 பொருட்கள் தயாரிக்கின்றனர். ஆனால் தமிழகத்தில் ஏதும் செய்யவில்லை. பா.ம.க., விவசாயிகள் பக்கம் இருக்கும். கடலுார் மாவட்டத்தை சேர்ந்த வேளாண் அமைச்சர் விவசாயிகளுக்காக ஏதும் செய்யவில்லை. இப்பகுதியில் 8 அடியில் இருந்த நிலத்தடி நீர்மட்டம், என்.எல்.சி., சுரங்கத்தால் 800 அடிக்கு கீழ் போய்விட்டது.
வேளாண்மைக்கு தனி பட்ஜெட் போட்டால் போதுமா. விவசாயிகளுக்கான திட்டம் ஒன்றுமில்லை. பலா, முந்திரி விவசாயிகளுக்கு உறுதுணையாக இருப்பேன். 500, 1000 ரூபாய் கொடுத்து ஓட்டுக்கள் வாங்கிவிடலாம் என நினைக்கின்றனர். இன்னும் ஆறு மாதத்தில் ஆட்சி மாற்றம் வரும். விவசாயிகள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அன்புமணி பேசினார்.