/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஹவாலா பணம் பிரிப்பதில் பிரச்னை வாலிபரை கடத்திய 2 பேர் கைது ஹவாலா பணம் பிரிப்பதில் பிரச்னை வாலிபரை கடத்திய 2 பேர் கைது
ஹவாலா பணம் பிரிப்பதில் பிரச்னை வாலிபரை கடத்திய 2 பேர் கைது
ஹவாலா பணம் பிரிப்பதில் பிரச்னை வாலிபரை கடத்திய 2 பேர் கைது
ஹவாலா பணம் பிரிப்பதில் பிரச்னை வாலிபரை கடத்திய 2 பேர் கைது
ADDED : செப் 11, 2025 03:18 AM
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே ஹவாலா பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கடத்திய 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, இருவரை கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த பேர்பெரியாங்குப்பத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் அசோக்குமார்,24. இவரது வங்கி கணக்கிற்கு கடந்தாண்டு கடலுார் செம்மங்குப்பம் அருண்குமார், விருத்தாசலம் அடுத்த புதுகூரைபேட்டை கலைச்செல்வன் ஆகியோர் மூலம் ஹவாலா பணம் முதலில் 2.50 கோடி, பின்னர் 4.50 கோடி வந்தது.
அதில் 2.50 கோடியை அசோக்குமார், அருண்குமாரிடம் கொடுத்துள்ளார். மீதி உள்ள 4.50 கோடியை மூவரும் பிரித்துக்கொள்வதில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் அசோக்குமார், நண்பர் தினேஷ்குமாருடன் புதுச்சேரியில் தலைமறைவாக இருந்தார்.
இந்நிலையில், இதையறிந்த கலைச்செல்வன், பேர்பெரியாங்குப்பத்தை சேர்ந்த தணிகைசெல்வத்திடம் கலைச்செல்வன் என்பவரிடம், அசோக்குமார், தினேஷ்குமார் இருவருக்கும் மது வாங்கி கொடுத்து, பைக்கில் ஒதியடிக்குப்பம் வழியாக அழைத்து வரும்படி கூறி உள்ளார்.
அதன்படி, நேற்று முன்தினம் அதிகாலை 2:15 மணிக்கு ஒதியடிக்குப்பம் அருகே அழைத்து வந்தபோது கலைச்செல்வன், நெய்வேலி அகிலன், நித்திஷ், அருண்குமார், மருங்கூர் தோப்புக்கொல்லையை சேர்ந்த பாலஸ்ரீதரன் உள்ளிட்டோர் சேர்ந்து அசோக்குமாரை கடத்தி சென்றனர்.
இது குறித்த புகாரின் பேரில் கலைச்செல்வன், அகிலன், தணிகைசெல்வன், அருண்குமார், பாலஸ்ரீதரன், நித்திஷ் ஆகிய 6 பேர் மீது நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்தனர். தணிகைசெல்வன்,22; நித்திஷ்,20; ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.