/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சைபர் கிரைம் புகாரில் மீட்கப்பட்ட ரூ.63 லட்சம் ஒப்படைப்பு சைபர் கிரைம் புகாரில் மீட்கப்பட்ட ரூ.63 லட்சம் ஒப்படைப்பு
சைபர் கிரைம் புகாரில் மீட்கப்பட்ட ரூ.63 லட்சம் ஒப்படைப்பு
சைபர் கிரைம் புகாரில் மீட்கப்பட்ட ரூ.63 லட்சம் ஒப்படைப்பு
சைபர் கிரைம் புகாரில் மீட்கப்பட்ட ரூ.63 லட்சம் ஒப்படைப்பு
ADDED : செப் 11, 2025 02:49 AM

ஆவடி, செப். 11-
ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் பொதுமக்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், 'ஆன்லைன்' மோசடி நபர்களிடம் இருந்து சைபர் கிரைம் போலீசார் மீட்ட 63 லட்சம் ரூபாய் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில், பங்குச்சந்தை, பகுதிநேர வேலைவாய்ப்பு தொடர்பான 'ஆன்லைன்' மோசடி புகார்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாதம் வரை பெறப்பட்ட 29 'சைபர் கிரைம்' புகார் தொடர்பாக, 26 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
மேலும், மோசடி நபர்களின் வங்கி கணக்கில் இருந்த 63.40 லட்சம் ரூபாய் முடக்கப்பட்டு, பணம் மீட்கப்பட்டது.
பின், நீதிமன்ற ஆணை பெற்று, சைபர் கிரைம் புகாரில் பணத்தை இழந்தவர்களிடம், கமிஷனர் சங்கர் நேற்று வழங்கினார்.