/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ புதிய வகுப்பறைக்கு அடிக்கல் எம்.எல்.ஏ., பங்கேற்பு புதிய வகுப்பறைக்கு அடிக்கல் எம்.எல்.ஏ., பங்கேற்பு
புதிய வகுப்பறைக்கு அடிக்கல் எம்.எல்.ஏ., பங்கேற்பு
புதிய வகுப்பறைக்கு அடிக்கல் எம்.எல்.ஏ., பங்கேற்பு
புதிய வகுப்பறைக்கு அடிக்கல் எம்.எல்.ஏ., பங்கேற்பு
ADDED : செப் 21, 2025 11:24 PM

விருத்தாசலம்: மங்கலம்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ரூ. 2.72 கோடி மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டும் பணியை, ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
மங்கலம்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2.72 கோடி ரூபாயில் 8 கூடுதல் வகுப் பறை கட்டடம், அறிவியல் ஆய்வகம், கழிவறை கட்டடம் ஆகியவை கட்டப்பட உள்ளன. மேலும், நல்லுார், சிறுகிராமம், சாத்துக்கூடல், கோ.பழவங்குடி அரசு உயர்நிலைப் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டுமான பணியை முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.
இதனையொட்டி மங்கலம்பேட்டை பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, பேரூராட்சி தலைவர் சம்சாத் பாரி இப்ராஹிம் தலைமை தாங்கினார். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சத்யபிரியா, உதவி பொறியாளர் தேவசூர்யா, தி.மு.க., பேரூராட்சி செயலாளர் செல்வம், காங்., வட்டார தலைவர்கள் ராவணன், சாந்தகுமார், வி.சி., கட்சி மண்டல செயலாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் காளமேகம் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., குத்துவிளக்கேற்றினார். தி.மு.க., வழக்கறிஞரணி அமைப்பாளர் பாரி இப்ராஹிம், இளைஞர் காங்., மாநில பொதுச் செயலாளர் ஜெயசங்கர், மாவட்ட தலைவர் சாகுல், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் சிராஜிதீன், பைசல், பச்சமுத்து, பொறியாளர் சுபாஷ் சந்திரபோஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.
பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் சத்யா ராஜ்குமார் நன்றி கூறினார்.