ADDED : செப் 21, 2025 11:24 PM
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் மின்வாரிய களப்பணியாளர்கள் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு துவங்கியது.
டி.என்.பி.எஸ்.சி., மூலம் மின்வாரிய களப் பணியாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கு மாவட்ட தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் மற்றும் பொறியாளர் ஐக்கிய சங்கம், நெல்லிக்குப்பம் கல்வி அறக்கட்டளை ஆகியன இணைந்து இலவச ப யிற்சி வகுப்பிற்கு ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, பயிற்சி வகுப்பு நெல்லிக்குப்பம் ஆர்.ஆர்.மெட்ரிக் பள்ளி யில் துவங்கியது. திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5:45 மணி முதல் இரவு 8:00 மணி வரை வகுப்பு நடக்கிறது என, அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் குமரவேல் தெரிவித்துள்ளார்.