/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரூ.26 லட்சம் நலத்திட்ட உதவி அமைச்சர் பன்னீர்செல்வம் வழங்கல் ரூ.26 லட்சம் நலத்திட்ட உதவி அமைச்சர் பன்னீர்செல்வம் வழங்கல்
ரூ.26 லட்சம் நலத்திட்ட உதவி அமைச்சர் பன்னீர்செல்வம் வழங்கல்
ரூ.26 லட்சம் நலத்திட்ட உதவி அமைச்சர் பன்னீர்செல்வம் வழங்கல்
ரூ.26 லட்சம் நலத்திட்ட உதவி அமைச்சர் பன்னீர்செல்வம் வழங்கல்
ADDED : செப் 21, 2025 11:25 PM

நடுவீரப்பட்டு,: நடுவீரப்பட்டு அடுத்த சாத்தங்குப்பம் கிராமத்தில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம் நடந்தது.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். ஆர்.டி.ஓ., சுந்தர்ராஜன், சுகாதார பணிகள் இணை இயக்குனர் மணிமேகலை, அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் அசோக் பாஸ்கர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட சுகாதார அலுவலர் பொற்கொடி வரவேற்றார். அமைச்சர் பன்னீர்செல்வம், 93 பயனாளிகளு க்கு 26 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
பின், அவர் பேசுகையில், கடலுார் மாவட்டத்தில் 'நலம் காக்கும் ஸ்டா லின்' திட்டத்தில் 43 மருத்துவ முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாமில், 96 ஆயிரத்து 806 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் 4 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர். முதியோர், விதவை உள்ளிட்ட உதவித் தொகை மூலம் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் பயனடைகின்றனர்.
புதுமை பெண்கள் திட்டத்தில் 39 ஆயிரத்து 828 மாணவிகளும், தமிழ் புதல்வன் திட்டத்தில் 24 ஆயிரத்து 244 மாணவர்களும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெறுகின்றனர்' என்றார்.
விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ., சண்முகம், தாசில்தார் மகேஷ், ஒன்றிய செயலாளர்கள் காசிராஜன், சுப்பிரமணியன், மாவட்ட விவசாய சங்கத் தலைவர் வைத்திலிங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஞானசேரகன், ஒன்றிய துணை செயலாளர்கள் ராஜேந்திரன், ஜோதி, துரை,மாவட்ட பிரதிநிதி ஞானசேகரன், அவைத்தலைவர் சாரங்கபாணி, விஜயராகவன் உட்பட பலர் பங்கேற்றனர்.
முகாமில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று, காது, மூக்கு, தொண்டை, பல், பொது மருத்துவம், இ.சி.ஜி., உள்ளிட்ட சிகிச்சை பெற்றனர்.
ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் அமிர்தாதேவி நன்றி கூறினார்.