/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சட்ட மன்ற உறுதிமொழி குழுவினர் கடலுாரில் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு சட்ட மன்ற உறுதிமொழி குழுவினர் கடலுாரில் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு
சட்ட மன்ற உறுதிமொழி குழுவினர் கடலுாரில் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு
சட்ட மன்ற உறுதிமொழி குழுவினர் கடலுாரில் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு
சட்ட மன்ற உறுதிமொழி குழுவினர் கடலுாரில் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு
ADDED : மே 21, 2025 11:40 PM
கடலுார்: கடலுாரில் சட்ட மன்ற உறுதிமொழி குழு எம்.எல்.ஏ.,க்கள் புதுக்குப்பம் போலீசார் குடியிருப்பு, சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தமிழ்நாடு சட்ட மன்றம் உறுதி மொழிக்குழுத் தலைவர் பண்ருட்டி எம்.எல்.ஏ., வேல்முருகன் தலைமையில் எம்.எல்.ஏ.,க்கள் சோழிங்கநல்லுார் அரவிந்த்ரமேஷ், சேலம்மேற்கு அருள், வானுார் சக்ரபாணி, மதுரை தெற்கு பூமிநாதன், காரைக்குடி மாங்குடி, அண்ணாநகர் மோகன், பெருந்துரை ஜெயக்குமார், ஆகியோர் கொண்ட குழுவினர் கலெக்டர் செந்தில்குமார் முன்னிலையில் கடலுார் பகுதியில் புதுக்குப்பத்தில் கட்டப்பட்டு வரும் புதிய காவலர் குடியிருப்புகள், சிப்காட் வளாகத்தில் உள்ள லாயல் சூப்பர் பேப்ரிக்ஸ், டாடா கெமிக்கல்ஸ் ஆகியவை நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
கடலுார் புதுக்குப்பம் பகுதியில் தமிழ்நாடு காவலர் குடியிருப்பு கழகம் சார்பில் ரூ.49.10 கோடி மதிப்பில் 24 எஸ்.ஐ.,கள், 155 போலீசார்கள் குடியிருப்புகள் புதியதாக கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தனர்.
இதனைதொடர்ந்து கடலுார் முதுநகர் சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள லாயல் சூப்பர் பேப்ரிக்ஸ் நிறுவனம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், தொழிற்சாலை பாதுகாப்பு போன்றவை குறித்து ஆய்வு செய்தனர். செம்மங்குப்பத்தில் உள்ள டாடா கெமிக்கல்ஸ் தொழிற்சாலையை பார்வையிட்டு சிலிக்கா தயாரிப்புகள், தொழிற்சாலை பாதுகாப்புகள் போன்றவை குறித்து ஆய்வு செய்தனர்.
மேலும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் ஆய்வு மேற்கொண்டார். அதில், முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறதா என கேட்டறிந்தார். பின்னர் மருத்துவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அதில், தலைமை மருத்துவர் சாமிநாதன் கூறுகையில், தினசரி புறநோயாளி பிரிவுக்கு மட்டும் 1,500க்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சை பெறுகின்றனர். ஆனால், 4 மருத்துவர்கள் மட்டுமே புறநோயாளிகள் பிரிவில் தற்போது உள்ளனர்.
எனவே, கூடுதலாக மேலும், 10 மருத்துவர்களை பணியமர்த்த வேண்டும். கூடுதல் செவிலியர்களை நியமிக்க வேண்டும்.
ஆய்வின் போது சட்டப்பேரவை அரசு இணைச் செயலாளர் கருணாநிதி, எஸ்.பி., ஜெயக்குமார், டி.ஆர்.ஓ., ராஜசேகரன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரி, தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் அதிகாரி, சிப்காட் திட்ட அலுவலர் உள்ளிட்ட அலுவலர்கள், உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் பலர் உடன் இருந்தனர்.