/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் நடத்தாவிட்டால் தீக்குளிப்போம் தெய்வீக பக்தர்கள் பேரவை அறிவிப்பு தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் நடத்தாவிட்டால் தீக்குளிப்போம் தெய்வீக பக்தர்கள் பேரவை அறிவிப்பு
தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் நடத்தாவிட்டால் தீக்குளிப்போம் தெய்வீக பக்தர்கள் பேரவை அறிவிப்பு
தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் நடத்தாவிட்டால் தீக்குளிப்போம் தெய்வீக பக்தர்கள் பேரவை அறிவிப்பு
தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் நடத்தாவிட்டால் தீக்குளிப்போம் தெய்வீக பக்தர்கள் பேரவை அறிவிப்பு
ADDED : மே 21, 2025 11:41 PM
சிதம்பரம்: தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்தாவிட்டால் 28 ல் தீக்குளிப்பு போராட்டம் நடத்தப்படும் எனதெய்வீக பக்தர்கள் பேரவையினர் தெரிவித்துள்ளனர்.
தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவனத் தலைவர் ஜெமினி ராதா விடுத்துள்ள அறிக்கை:
சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில், தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 108 வைணவ கோவில்களில் இது, 40- வது திவ்ய தேசமாகும்.
பல ஆண்டுகளாக பிரம்மோற்சவம் நடத்தப்படாமல் உள்ள இக்கோவிலில், சில மாதங்களுக்கு முன்பு, அறநிலையத்துறை மற்றும் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் அறங்காவலர்கள் பிரம்மோற்சவம் நடத்த முன்வந்தனர்.
நடராஜர் கோவில் தீட்சிதர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பிர்சனை ஏற்பட்டது. மேலும் சேதமடைந்த கோவிந்தராஜ் பெருமாள் கோவிலின் கொடிமரத்தையும், மாற்ற முயற்சித்த போதும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது.
மதுரையில் சைவ-வைணவர்களை ஒன்றிணைத்து நடத்தப்படுகிற சித்திரை திருவிழா போன்று, தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தை நடத்த பொது தீட்சிதர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அப்படி இல்லையெனில், கோரிக்கையை வலியுறுத்தி வரும் மே 28-ந்தேதி தீ குளிப்பு போராட்டம் நடத்தப்படும் என ஜெமினி ராதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இம்மனு தமிழக முதல்வர் ஸ்டாலின், அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மாவட்ட நிர்வகத்தினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.