/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பத்தாம் வகுப்பு தேர்வில் மாவட்டம் பின்தங்கியது ஏன்?: அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை என குற்றச்சாட்டுபத்தாம் வகுப்பு தேர்வில் மாவட்டம் பின்தங்கியது ஏன்?: அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை என குற்றச்சாட்டு
பத்தாம் வகுப்பு தேர்வில் மாவட்டம் பின்தங்கியது ஏன்?: அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை என குற்றச்சாட்டு
பத்தாம் வகுப்பு தேர்வில் மாவட்டம் பின்தங்கியது ஏன்?: அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை என குற்றச்சாட்டு
பத்தாம் வகுப்பு தேர்வில் மாவட்டம் பின்தங்கியது ஏன்?: அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை என குற்றச்சாட்டு
ADDED : மே 21, 2025 11:42 PM

கடலுார்: பிளஸ் 2 தேர்வில் 22ம் நிலையில் இருந்த கடலுார் மாவட்டம் 10ம் இடத்திற்கு முன்னேறியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 20ம் இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டது ஏன் என, அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.
கடலுார் மாவட்டம் கல்வியில் மிகவும் பின் தங்கி இருந்தது. இந்த நிலையை மாற்ற இதற்கு முன்பு இருந்த கலெக்டர் அருண் தம்புராஜ் கல்வித்துறை அதிகாரிகளை கடுமையாக சாடினார்.
அதனால் அதிகாரிகள் வேறு வழியின்றி அடிக்கடி பள்ளிகளுக்கு ஆய்வுப்பணி மேற்கொண்டதன் விளைவாக பிளஸ் 2 தேர்வில் மாணவ, மாணவியர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றனர்.
அதன்காரணமாக தேர்ச்சி சதவீதம் மாநில அளவில் 22ம் நிலைக்கு வந்தது.
அதைத்தொடர்ந்து நடப்பு 2024-25ல் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து அதேப்போல கல்வித்துறையின் மீது ஒரு கண் இருந்து கொண்டே இருந்தது.
அடிக்கடி மாவட்டம் முழுவதும் நேரடியாக விசிட் செய்தார். அதிகாரிகள் தேர்ச்சியை அதிகரிக்க பெரும்பாடு பட்டனர். இதன் விளைவாக கடலுார் மாவட்டம் பிளஸ் 2 தேர்வில் 96.06 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 22ம் இடத்தில் இருந்து 10ம் இடத்திற்கு முன்னேறியது.
இதனால் கலெக்டர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதைத்தொடர்ந்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியானது. அதில் கடலுார் மாவட்டம் 94.51 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர். கடந்த ஆண்டை விட 1.88 சதவீதம் தேர்ச்சி சதவீதம் அதிகரித்து இருந்தாலும் மாநில அளவிலான ரேங்கில் 19வது இடத்தில் இருந்து 20ம் இடத்திற்கு பின்னுக்கு தள்ளியது.
இந்த தேர்ச்சி சதவீதம் அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது, அதிகாரிகள் அனைவருமே பிளஸ் 2 தேர்வில் அதிகளவு மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காகவே பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
அதாவது, சிறப்பு வகுப்பு, அடிக்கடி சோதனை தேர்வு, ஆசிரியர்களோடு அதிகாரிகள் ஆலோசனை போன்ற நடவடிக்கைள் காரணமாக பிளஸ் 2 தேர்வில் அதிக தேர்ச்சி இருந்தது.
பிளஸ் 2 க்கு எடுத்த நடவடிக்கை போல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிகாரிகள் ஆர்வம் காட்டாததுதான் காரணம் என்கின்றனர் பெற்றோர்கள். இனி வரும் ஆண்டிலாவது மாநில அளவிலான வரிசைபட்டியலில் கடலுார் மாவட்டம் முன்னேற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.