/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விளை நிலங்களை வீட்டுமனைகளாக மாற்ற பாசன வாய்க்காலை துார்த்து பாதை அமைப்பு விளை நிலங்களை வீட்டுமனைகளாக மாற்ற பாசன வாய்க்காலை துார்த்து பாதை அமைப்பு
விளை நிலங்களை வீட்டுமனைகளாக மாற்ற பாசன வாய்க்காலை துார்த்து பாதை அமைப்பு
விளை நிலங்களை வீட்டுமனைகளாக மாற்ற பாசன வாய்க்காலை துார்த்து பாதை அமைப்பு
விளை நிலங்களை வீட்டுமனைகளாக மாற்ற பாசன வாய்க்காலை துார்த்து பாதை அமைப்பு
ADDED : மே 21, 2025 11:40 PM

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்றிட பாசன வாய்க்காலில் சிலர் மண்ணை கொட்டி பாதை அமைப்பதை அதிகாரிகள் தடுக்க வேண்டும்.
விருத்தாசலம் அடுத்த இளமங்கலம், ஆலிச்சிகுடி, சாத்துக்கூடல் உட்பட பதினைந்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் பெய்த கனமழையால் கஸ்பா ஏரி நிரம்பி, விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் அறுவடை நேரத்தில் விவசாயிகள் கடுமையாக பாதித்தனர்.
கஸ்பா ஏரியை நிரந்தரமாக துார்வாரி, முழு கொள்ளளவு நீர்ப்பிடிப்பு ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், மேட்டுக்காலனி - இளமங்கலம் சாலையோரம் உள்ள விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்றும் பணியில் நடந்து வருகிறது. இதற்காக மனைக்கு சென்று வர ஏதுவாக, கஸ்பா ஏரியில் இருந்து தண்ணீர் செல்லும் பாசன வாய்க்காலில் இருந்த கோரை புற்களை அகற்றி, முட்புதர்கள், கோரை புற்களை ஏரிக்குள் கொட்டப்பட்டது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
தற்போது, வீட்டு மனைகளாக மாற்றிய பகுதிக்குள் சென்று வர வசதியாக பாசன வாய்க்காலில் சிலர் மண்ணை கொட்டி துார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், துார்ந்து கிடக்கும் வாய்க்காலில் இருந்து தண்ணீர் வழிந்தோடி எதிர்திசையில் உள்ள விளைநிலங்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், கிராம மக்களின் வசதிக்காக 80 லட்சம் ரூபாயில் போடப்பட்ட தார் சாலையும் பாழாகி வருகிறது. இது குறித்து ஆர்.டி.ஓ., நேரில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.