/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கல்விப்பணியில் சாதனை படைத்து வரும் கடலுார் லட்சுமி சோர்டியா பள்ளிகள் கல்விப்பணியில் சாதனை படைத்து வரும் கடலுார் லட்சுமி சோர்டியா பள்ளிகள்
கல்விப்பணியில் சாதனை படைத்து வரும் கடலுார் லட்சுமி சோர்டியா பள்ளிகள்
கல்விப்பணியில் சாதனை படைத்து வரும் கடலுார் லட்சுமி சோர்டியா பள்ளிகள்
கல்விப்பணியில் சாதனை படைத்து வரும் கடலுார் லட்சுமி சோர்டியா பள்ளிகள்
ADDED : மே 21, 2025 11:40 PM

கடலுார்:கடலுார் லட்சுமி சோர்டியா கல்வி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர் மாவீர்மல் சோர்டியா கூறியதாவது, கடலுார் திருப்பாதிரிப்புலியூர் எஸ்.எஸ்.ஆர்.,நகரில் லட்சுமி சோர்டியா நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. கிராமத்து மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களின் கனவையும் நினைவாக்கும் வகையில் கல்வி பணியை வழங்கி வருகிறோம். உறுதுணையாக பள்ளி முதல்வர் சந்தோஷ்மல் சோர்டியா, துணை முதல்வர் பத்தாகான், ஒருங்கிணைப்பாளர் சித்ரா ஆகியோர் ஒருங்கிணைந்து செயலாற்றி பள்ளியை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச்செல்கின்றனர்.
கட்டண சலுகை
மாணவர்களின் வெற்றி என்பதை மட்டுமே இலக்காக கொண்டு அனுபவமும், திறமையும் உள்ள ஆசிரியர்களால் சிறந்த முறையில் கல்வி கற்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாணவரும், மாணவியும் பெருமிதம் கொள்ளும் வகையில் சிறந்த மருத்துவராக, பொறியாளராக, அரசுப்பணிக்கு ஏற்றவர்களாக உருவாக்குவதே பள்ளியின் நோக்கமாக இருந்து வருகிறது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் முதல் மதிப்பெண் பெறும் மணாவர்களை ஊக்கப்படுத்தி மாவட்ட மற்றும் மாநில அளவில் முதலிடம் பெற சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு கட்டண சலுகை அளிக்கப்படுகிறது. அனைத்து பகுதிகளுக்கும் பள்ளி பஸ் வசதி உள்ளது.
சி.சி.டி.வி., பாதுகாப்புடன் கூடிய பள்ளி வளாகம் அமைந்துள்ளது. எஸ்.எம்.எஸ்.,அறிவிப்புகள் மூலமாக பள்ளி தகவல்கள் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கணினி வகுப்புகள், அறிவியல் ஆய்வகங்கள், நுாலக வசதிகள் உள்ளன.
கல்விப்பணியில் ஒரு மைல்கல்லாக விளங்கும் இந்த நிறுவனத்தின் மற்றொரு அங்கமாக திருப்பாதிரிப்புலியூர் பாபுராவ் தெருவில் ஸ்ரீலட்சுமி சோர்டியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கிவருகிறது. முதல்வர் அசோக்மல் சோர்டியா தலைமையில் செயல்படும் இப்பள்ளி ஆசிரியர்களின் அயராத உழைப்பு பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தின் மேன்மையை குறிக்கோளாக கொண்டு இயங்குகிறது என தெரிவித்தார்.