/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : மே 31, 2025 11:52 PM
கடலுார்: கடலுார் முதுநகர் காமாட்சி அம்மன் கோவிலில், வரும் 6ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.
கடலுார் முதுநகர் காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நாளை (2ம் தேதி) காலை கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள் நடக்கிறது.
வரும் 6ம் தேதி காலை மஹா பூர்ணாஹூதியை தொடர்ந்து, கடங்கள் புறப்பாடாகி, 7:00 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு மஹா அபிஷேகமும், இரவு அம்மன் வீதியுலாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.