ADDED : மே 31, 2025 11:52 PM

இதுகுறித்து முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியும், அண்ணாமலைப் பல்கலைக் கழக வேளாண் கல்லுாரி பூச்சியியல் துறை தலைவருமான செல்வநாராயணன் கூறியதாவது: இப்பள்ளியில் கல்வி பயின்றது பெருமையாக உள்ளது.
சாரணர் இயக்கம் மூலமாக சமூக சேவை மற்றும் தலைமை பண்புகளை மாணவர்களுக்கு வளர்த்த பள்ளி இது. முத்தமிழ் வித்தகர்களாக மாணவர்களை உருவாக்க மாவட்ட கலைக்கழக போட்டிகளை நடத்தி பல பரிசுகளை வாங்கியது.
சிறந்த விளையாட்டு மைதானம் மற்றும் தலைசிறந்த விளையாட்டு ஆசிரியர்கள் மூலம் திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்கியது. ஒழுக்கம் மற்றும் நேர்மை பண்புகளை மாணவர்களிடையே வளர்த்ததது. அண்ணாமலை பல்கலைக்கழகம் உருவாக கருவாக இருந்தது இப்பள்ளி.