ADDED : மே 31, 2025 11:52 PM

கடலுார்: நெல்லிக்குப்பத்தில் கடலுார் ரோட்டரி சங்க நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் குடும்ப விழா நடந்தது.
முன்னாள் மாவட்ட ஆளுநர் பிறையோன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் இளம் தொழில் முனைவோர் சங்க நிர்வாகி சிவா நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்தார். டி.வி.ஆர்.,கல்லுாரி ரங்கமணி, பவானி கல்லுாரி நாராயணன் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை மண்டலம் 6ன் அடுத்த ஆண்டிற்கான துணை ஆளுநர் தேர்வு பவானி மசாலா ஜெய்சங்கர் செய்திருந்தார். ரோட்டரி சங்கம் அபிநயா ஜனார்த்தனம், வழக்கறிஞர் தமிழரசன், சண்முகம், துணை ஆளுநர் வெங்கடேஷ், ஆனந்தா ஜூவல்லரி ராஜி, வேல்முருகன், செல்வராஜ், மோகன், முருகன், வீரமணி, ராசன், ஞானவேல், ஞானசேகரன், சீனிவாசன், பிரதீப், சுந்தரமூர்த்தி டாக்டர் ராஜேந்திரன் பங்கேற்றனர்.