Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வலியுறுத்தல்: 2.0 குடிநீர் வரி வசூலை தேர்தல் வரை ஒத்தி வைக்க... 24 மணி நேரமும் தண்ணீர் வழங்க நிர்வாகம் ஏற்பாடு

வலியுறுத்தல்: 2.0 குடிநீர் வரி வசூலை தேர்தல் வரை ஒத்தி வைக்க... 24 மணி நேரமும் தண்ணீர் வழங்க நிர்வாகம் ஏற்பாடு

வலியுறுத்தல்: 2.0 குடிநீர் வரி வசூலை தேர்தல் வரை ஒத்தி வைக்க... 24 மணி நேரமும் தண்ணீர் வழங்க நிர்வாகம் ஏற்பாடு

வலியுறுத்தல்: 2.0 குடிநீர் வரி வசூலை தேர்தல் வரை ஒத்தி வைக்க... 24 மணி நேரமும் தண்ணீர் வழங்க நிர்வாகம் ஏற்பாடு

ADDED : மே 29, 2025 03:34 AM


Google News
கடலுார்: கடலுார் மாநகராட்சியில் சொத்துவரி, குடிநீர் வரி, பாதாள சாக்கடை வரி போன்ற வரிகள் மக்கள் செலுத்துவதற்கு பழகியுள்ளனர்.

தேர்தல் வரும் இந்த நேரத்தில் 2.0 திட்டத்தில் கூடுதல் வரி வசூல் செய்வதை ஒத்தி வைக்க வேண்டும் என கவுன்சிலர் வலியுறுத்தி பேசினார். கடலுார் மாநகராட்சி கூட்டம் நேற்று காலை நடந்தது. மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கினார். ஆணையாளர் அனு, துணை மேயர் தாமரைச்செல்வம் முன்னிலை வகித்தனர்.

தமிழரசன் (தி.மு.க.,) கடலுார் முதுநகர் பகுதியில் தனியார் சார்பில் கியாஸ் பைப்லைன் பதிக்கம் பணி நடந்து வருகிறது. இந்த பணிக்காக மாநகராட்சியிடம் முறையாக அனுமதி பெற்று நடக்கிறதா என கேட்டார்.

விஜயலட்சுமி செந்தில்(தி.மு.க.,) கடலுார் முதுநகர் பகுதியில் மீன் மார்க்கெட் மற்றும் கடைகள் கட்டப்பட்டு வருகிறது. ஆனால் இங்கு கட்டப்பட்டு வரும் கட்டடப்பணிகள் மிகவும் மெத்தனமாக நடந்து வருகிறது. இது மட்டுமன்றி கடைகள் போதுமானதாக இல்லை.

கீதா குணசேகரன் (தி.மு.க.) கடலுார் செம்மண்டலம், போஸ்ட் ஆபீஸ், திருப்பாதிரிப்புலியூர் போன்ற இடங்களில் இருந்த செயற்கை நீருற்றை சரி செய்ய வேண்டும். பஸ்சுக்காக காத்திருக்கும் நேரத்தில் அந்த நீரூற்றை பார்க்கும்போது மனதுக்கு இதமாக இருக்கும். தற்போது கடலுார் மாநகரில் 2.0 என்கிற திட்டம் செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கப்படவுள்ளது. இதனால் கூடுதல் குடிநீர் வரி செலுத்த வேண்டியுள்ளது.

ஏற்கனவே சொத்துவரி, குடிநீர் வரி, பாதாள சாக்கடை திட்ட வரி, என பல்வேறு வரிகள் வசூலிக்கப்படுகின்றன. அத்துடன் இந்த கூடுதல் குடிநீர் வரியை உடனே வசூலிப்பது உகந்ததாக இருக்காது. காரணம் தேர்தல் நெருங்குகிறது. ஏற்கனவே மாநகராட்சி மக்களிடம் வரி வசூல் செய்வதை அறவே விட்டுவிட்டனர். தற்போதுதான் வரி செலுத்த வேண்டும் என்கிற வழக்கம் மக்களிடம் வந்து கொண்டு

இருக்கிறது. இந்த தருணத்தில் கூடுதல் வரி சற்று ஒத்தி வைத்து வசூலித்தால் சிறப்பாக இருக்கும்.

ேஹமலதா சுந்தரமூர்த்தி: கல்வெட்டில் கவுன்சிலர்கள் பெயரை எழுதியதற்கு நன்றி. ஆனால் எங்கள் கணவரின் பெயர்களை ஏன் சேர்க்கவில்லை என்று கேட்டார்.

பிரகாஷ் (தி.மு.க.,): பெருமாள் நகர், சண்முகம் சாலை போன்ற பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வடிகால் வாய்க்கால் கட்டப்பட்டு பாதி நிலையில் உள்ளது. தற்போது இதுவரை பணிகள் தொடங்கவில்லை. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுரேஷ்பாபு: எனது வார்டில் தெருவிளக்குகள் சரிவரி எரியாததால் குற்றச்சம்வங்கள் நடக்க காரணமாக உள்ளது. அதற்கு மேயர் பதிலளித்து பேசும்போது, பல இடங்களில் தெருவிளக்குகள் எரியவில்லை என்று புகார் வந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய நேரிடும் என எச்சரித்தார் .

கண்ணன் (த.வா.க) எனது வார்டில் மின் விளக்கு எரியவில்லை. சாலை வசதியில்லை. கழிவுநீர் வால்வாய் இல்லை. அதிகாரிகளும் தவறான தகவலை தருகின்றனர். எனவே இப்பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆரமுது (தி.மு.க): சில்வர் பீச்சில் உயர்மின் விளக்கு காற்றின் வேகத்தால் கீழேவிழுந்து உடைந்துவிட்டது. அதனை உடனே மாற்றித்தர வேண்டும்.

சரவணன் (பா.ம.க) : புதிய பஸ் நிலையம் எங்கு அமைகிறது. மக்களுக்கு ஒரே குழப்பமாக உள்ளது. இதற்கு பதிலளித்த மேயர், புதிய பஸ் நிலையம் அமைப்பது தொடர்பாக குழு நேரில் வந்து ஆய்வு செய்து முடிவு செய்துள்ளனர்.

இவ்வாறு கவுன்சிலர்கள் விவாதம் நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us