/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தேசிய மிதிவண்டி தின சைக்கிள் போட்டி சிதம்பரத்தில் வரும் ஜூன் 3ம் தேதி நடக்கிறது தேசிய மிதிவண்டி தின சைக்கிள் போட்டி சிதம்பரத்தில் வரும் ஜூன் 3ம் தேதி நடக்கிறது
தேசிய மிதிவண்டி தின சைக்கிள் போட்டி சிதம்பரத்தில் வரும் ஜூன் 3ம் தேதி நடக்கிறது
தேசிய மிதிவண்டி தின சைக்கிள் போட்டி சிதம்பரத்தில் வரும் ஜூன் 3ம் தேதி நடக்கிறது
தேசிய மிதிவண்டி தின சைக்கிள் போட்டி சிதம்பரத்தில் வரும் ஜூன் 3ம் தேதி நடக்கிறது
ADDED : மே 29, 2025 03:33 AM
சிதம்பரம்: தேசிய மிதிவண்டி தினத்தையொட்டி, ஜீன் 3 ம் தேதி சைக்கிள் போட்டி நடைபெற உள்ளது.
மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நம் ஆரம்ப போக்குவரத்து துணையாக இருந்த சைக்கிளை மறந்தே விட்டோம். போக்குவரத்திற்கு சைக்கிளை மட்டுமே நம்பி இருந்த காலம் போய், தற்பொழுது மோட்டார் பைக், கார் உள்ளிட்ட பல்வேறு வானங்களின் வரவால், ஆரோக்கியத்தை இழந்து வருகிறோம்.
சமீப காலமாக உலக அளவில் மீண்டும் சைக்கிள் ஓட்டும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. தமிழக அரசும், ஒவ்வொறு மாவட்டத்திலும், சைக்கிளுக்கென தனி பாதை அமைக்க ஆயத்தமாகி வருகின்றனர். ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும், முக்கிய விஷயமா சைக்கிள் ஓட்டுவது பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இக்கால இளைஞர்கள், இளம்பெண்கள் மத்தியில் சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிக்கும் வகையில், சிதம்பரம் கஸ்தூரிபாய் நிறுவனம் சார்பில், தேசிய சைக்கிள் தினத்தையொட்டி, ஜூன் 3ம் தேதி, சிதம்பரத்தில் சைக்கிள் போட்டி நடைபெற உள்ளது.
சிதம்பரம் - சீர்காழி பைபாஸ் சாலையில் உள்ள ெஷம்போர்ட் பள்ளியிலிருந்து, காலை 7.00 மணியளவில் போட்டி துவங்க உள்ளது. இப் போட்டியில் பங்கேற்ப விருப்பமுள்ளவர்கள் 9787 441755 என்ற மொபைல் எண்ணில் பதிவு செய்து கொள்ளலாம் என போட்டி ஏற்பட்டாளர்கள் சார்பில் தெரிவித்துள்ளனர்.