/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நெல்லிக்குப்பத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு நெல்லிக்குப்பத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
நெல்லிக்குப்பத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
நெல்லிக்குப்பத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
நெல்லிக்குப்பத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
ADDED : ஜூன் 04, 2025 09:46 PM

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
நெல்லிக்குப்பத்தில் பகுதியில் குறுவை,சம்பா,தாளடி என ஒவ்வொரு பருவத்தில் விளைவிக்கும் நெல்லை வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு நெல்லை வாங்கி வந்தனர். கடந்த 4 ஆண்டுகளாக அரசின் கொள்முதல் நிலையம் திறந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இதனால் விவசாயிகள் வியாபாரிகளை நம்பாமல் அரசின் நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்பனை செய்தனர்.
இதனால் மூட்டைக்கு 500 ரூபாய் வரை கூடுதலாக விவசாயிகளுக்கு லாபம் கிடைத்தது.தற்போது நவரை பட்ட நெல் அறுவடை துவங்கியுள்ளது.அரசின் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் கடந்த 10 நாட்களாக 2 ஆயிரம் மூட்டைகளுக்கு மேல் நெல் மூட்டைகளை சேமித்து பாதுகாத்வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மழை பெய்ததால் அவசரமாக நேற்று கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
நிகழ்ச்சியில் விவசாய சங்க செயலாளர் ராமானுஜம்.நந்தகோபால்,வேலு,அன்பு உட்பட பல விவசாயிகள் கலந்து கொண்டனர்.