/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கடன் வாங்கியவரை காரில் கடத்திய மூன்று பேர் கொண்ட கும்பல் கைது நெய்வேலியில் பரபரப்பு கடன் வாங்கியவரை காரில் கடத்திய மூன்று பேர் கொண்ட கும்பல் கைது நெய்வேலியில் பரபரப்பு
கடன் வாங்கியவரை காரில் கடத்திய மூன்று பேர் கொண்ட கும்பல் கைது நெய்வேலியில் பரபரப்பு
கடன் வாங்கியவரை காரில் கடத்திய மூன்று பேர் கொண்ட கும்பல் கைது நெய்வேலியில் பரபரப்பு
கடன் வாங்கியவரை காரில் கடத்திய மூன்று பேர் கொண்ட கும்பல் கைது நெய்வேலியில் பரபரப்பு
ADDED : ஜூன் 04, 2025 09:46 PM

நெய்வேலி; நெய்வேலியில் குடும்ப செலவிற்காக கடன் வாங்கிய ஓட்டல் ஊழியரை காரில் கடத்தி கொலை மிரட்டல் விடுத்த மூவரை போலீசார் கைது செய்து,காரை பறிமுதல் செய்தனர். நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 19 சேர்ந்தவர் கலியன் மகன் கணபதி,35; இவரது மனைவி ஜெயந்தி,30; கணபதி நெய்வேலி மத்திய பஸ் நிலையத்தில் உள்ள தனியார் ஓட்டலில் சப்ளையராக பணியாற்றி வந்தார்.
இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன் விருத்தாசலம் பூதாமூரில் தனது மனைவியுடன் வசித்த போது, குடும்ப செலவுக்காக அதே பகுதியை சேர்ந்த மூவரிடம் 12 லட்ச ரூபாய் கடன் வாங்கினார். பணத்தை திருப்பி கொடுக்க முடியாததால் மனைவியுன் தலைமறைவாகி விட்டார்.
இந்நிலையில் கணபதி நெய்வேலியில் ஓட்டலில் வேலை செய்து வருவதை கடன் கொடுத்த மூவருக்கும் தெரியவந்தது. கடன் கொடுத்த விருத்தாசலம் அடுத்துள்ள பொன்னேரியை சேர்ந்த ராஜூலு மகன் வேலு (எ) குமரவேல்,33; விருத்தாசலம் பூதாமூரை சேர்ந்த குப்புசாமி மகன் சத்யராஜ்,30; மற்றும் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் சுரேஷ்,33; ஆகியோர் ஒன்று சேர்ந்து, நேற்று முன்தினம் நெய்வேலியில் தங்கியிருந்த கணபதியை விருத்தாசலத்திற்கு காரில் கடத்தி சென்று கொடுத்த பணத்தை கேட்டு கொலை மிரட்டல் விடுத்தனர்.
தனது கணவரை காரில் கடத்திச்செல்வதாக கணபதியின் மனைவி ஜெயந்தி டவுன்ஷிப் போலீசில் புகார் செய்தார். உடன் இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் கணபதியை கடத்திய மூவரையும் விருத்தாசலத்தில் நேற்று கைது செய்து கணபதியை மீட்டனர். மேலும், கடன் கொடுத்தவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கடத்தல் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.