/உள்ளூர் செய்திகள்/கடலூர்/புவனகிரியில் பா.ஜ., மாஜி தலைவர் அண்ணாமலை பிறந்த நாள் விழா புவனகிரியில் பா.ஜ., மாஜி தலைவர் அண்ணாமலை பிறந்த நாள் விழா
புவனகிரியில் பா.ஜ., மாஜி தலைவர் அண்ணாமலை பிறந்த நாள் விழா
புவனகிரியில் பா.ஜ., மாஜி தலைவர் அண்ணாமலை பிறந்த நாள் விழா
புவனகிரியில் பா.ஜ., மாஜி தலைவர் அண்ணாமலை பிறந்த நாள் விழா
ADDED : ஜூன் 04, 2025 09:47 PM

புவனகிரி; புவனகிரியில் பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்த நாள் விழா நடந்தது.
இதனை முன்னிட்டு, புவனகிரியில் ப.ஜ., சார்பில் வள்ளலார் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தனியார் திருமணமண்டபத்தில் சிறப்பு ரத்ததான முகாம் நடந்தது. மாவட்ட செயலாளர் திருமாவளவன் தலைமைதாங்கினார். , மாவட்டத் தலைவர் தமிழழகன் துவக்கி வைத்தார். கடலூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நிர்வாகத்தினர் ரத்தம் சேகரித்தனர்.
தொடர்ந்து ஒன்றிய துணைத் தலைவர் லட்சுமிநரசிம்மன், முன்னாள் பட்டியல் அணி மாநில துணை தலைவர் வெற்றிவேல், நிர்வாகிகள் கோபிநாத், கணேசன், தியாகு, சக்திவேல் முன்னிலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை, மூத்த நிர்வாகிகள் ஸ்ரீதரன், வேட்டைகுடி எழிலரசன், ரமேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பழனியப்பன், விஜயகுமார், பழனி, அரவிந்தன், கவிசெல்வன், கலைவாணி இளைஞரணி சதீஷ்குமா,ர் பாலு, விக்னேஸ்வரன் புவனகிரி அடிகளார் இளங்கோவன், சோமசுந்தரம், திருமூர்த்தி, ஜோதிநடராஜன், கந்தசாமி, நாகராஜன், ராஜேந்திரன், இளையமாறன், ஞானசபாபதி, நாராயணன் ராஜேந்திரன், சண்முகம் மகளிரணி சாந்தலட்சுமி, வள்ளி, பழனியம்மாள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். ரத்ததானம் வழங்கிய இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கினர். திருமூர்த்தி நன்றி கூறினார்.