Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மதுபாட்டில் கடத்தியவர் கைது

மதுபாட்டில் கடத்தியவர் கைது

மதுபாட்டில் கடத்தியவர் கைது

மதுபாட்டில் கடத்தியவர் கைது

ADDED : ஜூன் 05, 2025 07:37 AM


Google News
Latest Tamil News
திண்டிவனம்; திண்டிவனம் அருகே காரில் மது பாட்டில் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையில் நேற்று அதிகாலை 2:00 மணியளவில், மயிலம் அடுத்த பெரும்பாக்கம் செக்போஸ்ட்டில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, புதுச்சேரியிலிருந்து வந்த போக்ஸ்வேகன் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், புதுச்சேரியிலிருந்து 201 மதுபாட்டில் கடத்தி வந்தது தெரிய வந்தது. விசாரணையில் புதுச்சேரி, தட்டாஞ்சாவடியை சேர்ந்த தமிழ்ச்செல்வன், 34; செங்கல்பட்டில் கூடுதல் விலைக்கு விற்க கடத்தி சென்றதும் தெரிந்தது.

அதனைத் தொடர்ந்து, தமிழ்ச்செல்வனை கைது செய்து, கார் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us