ADDED : செப் 07, 2025 07:35 AM

கடலுார் : தனித்தன்மையை விட்டுக் கொடுக்காமல், யாருக்கும் அஞ்சாமல் நேர்மை யோடு செய்திகளை வெளியிடும் நாளிதழ் 'தினமலர்' என, கடலுார் மாநகர துணைமேயர் தாமரைச்செல்வன் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
'தினமலர்' நாளிதழ், 75வது ஆண்டு பவளவிழாவில், மென்மேலும் பல்வேறு சிறப்புகளை பெற வி.சி., கட்சி சார்பில் வாழ்த்துகிறோம்.
'தினமலர்' எந்த சூழ்நிலையிலும் தமது தனித்தன்மையை விட்டுக் கொடுக்காமல், யாருக்கும் அஞ்சாமல் மக்களுக்கான செய்திகளை நேர்மையோடும், தைரியத்தோடு ம் பதிவிடுகிறது.
மாவட்டங்களில் நடக்கு ம் தவறுகளை தைரியமாக சுட்டி காட்டக்கூடிய நாளிதழ் தினமலர் என்பதில் பெருமை கொள்கிறோம்.