/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தனியார் நிறுவன காவலாளி தாக்கு 10 பேர் மீது வழக்கு தனியார் நிறுவன காவலாளி தாக்கு 10 பேர் மீது வழக்கு
தனியார் நிறுவன காவலாளி தாக்கு 10 பேர் மீது வழக்கு
தனியார் நிறுவன காவலாளி தாக்கு 10 பேர் மீது வழக்கு
தனியார் நிறுவன காவலாளி தாக்கு 10 பேர் மீது வழக்கு
ADDED : செப் 07, 2025 07:36 AM
கடலுார் : கடலுார் சிப்காட்டில், தனியார் கம்பெனியில் காவலாளியை தாக்கி பொருட்களை சேதப்படுத்திய 10 பேர் மீது, முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கடலுார் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் நேற்று முன்தினம் ரசாயன புகை வெளியேறி பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மயக்கம் ஏற்பட்டு பாதிப்படைந்தனர்.
அப்போது குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், சந்திரசேகர், சிவராமன், சூரியா, வேல்முருகன், வைத்தியநாதன், தினகரன், ஸ்ரீதர், அஜித்குமார், பிரதால் ஆகிய பத்து பேர், அந்த தனியார் நிறுவனத்திற்குள் நுழைந்து செக்யூரிட்டியை தாக்கி அங்கிருந்த ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை சேதப்படுத்தினர்.
இதுகுறித்து தனியார் நிறுவன மனித வள மேலாளர் சாமுவேல் தேவசித்தர் பென்னிசன் கொடுத்த புகாரின் பேரில், கடலுார் முதுநகர் போலீசார், 10 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.