/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பொதுமக்களுக்கு விழிப்புணர்வு 'தினமலர்' முக்கிய பங்களிப்பு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு 'தினமலர்' முக்கிய பங்களிப்பு
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு 'தினமலர்' முக்கிய பங்களிப்பு
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு 'தினமலர்' முக்கிய பங்களிப்பு
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு 'தினமலர்' முக்கிய பங்களிப்பு
ADDED : செப் 07, 2025 07:34 AM

மந்தாரக்குப்பம் : 'தினமலர்' நாளிதழ் அனைத்து துறைகளிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது என, அரிமா மாவட்ட தலைவர் ராஜமாரியப்பன் கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
பத்திரிக்கை துறையில் 75வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் 'தினமலர்' நாளிதழ் சமுதாயத்தில் மிகப்பெரிய பங்காற்றி வருகிறது.
அனைத்து துறைகளிலும் அலசி ஆராயந்து நாட்டு மக்களுக்கு உண்மை செய்தியை வெளிப்படுத்தி வருகிறது.
உள்ளுர் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் 'தினமலர்' சேவை பாராட்டக்கூடியது. அரசியல், பெண்கள் பாதுகாப்பு, விளையாட்டு, சினிமா, டீ கடை பெஞ்சு, இது உங்கள் இடம், பேச்சு, பேட்டி, அறிக்கை, அக்கம் பக்கம், பக்கவாத்தியம் ஆகியவற்றில் 'தினமலர்' பங்களிப்பு சிறப்பாக உள்ளது. 'தினமலர்' பவள விழா கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.